இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      விளையாட்டு
PV Sindhu 2019 07 21

ஜகார்தா : இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார்.

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்தினார். யமாகுச்சிக்கு எதிராக 14 ஆட்டங்களில் மோதிய சிந்து அதில் 10-ல் வெற்றி கண்டிருந்ததால் ஆட்டத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. இன்றை ஆட்டம் தொடங்கியதும் பிவி சிந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல்செட்டில் 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தார். இதனையடுத்து யமாகுச்சியின் வேகமான ஆட்டம், செட்டை திசை மாற்றியது. 21-15 என்ற கணக்கில் முதல் செட் யமாகுச்சியிடம் சென்றது. இரண்டாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் பெற்று யமாகுச்சி, சிந்துவை தோற்கடித்து பட்டம் வென்றார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து