முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை: ஜெகன்மோகன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

 நகரி : ஆந்திராவில் 4  லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.   

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆன பிறகு இதற்கான திட்டத்தை தயாரித்தார்.
இதன் மூலம் ஒரே நேரத்தில் 4  லட்சம் ஆந்திர இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இந்த தகவலை ஆந்திர அரசு தெரிவித்து உள்ளது.  கிராமங்களில் வாழும் 4 ஆயிரம் பேருக்கு ஒரு கிராம தலைமை செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் 50 வீட்டுக்கு ஒரு தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் அந்த மக்களுக்கு ரே‌சன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட தேவைகளை அந்தந்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

இது போல் மாநிலம் முழுவதும் கிராமங்களில் அரசு சார்பில் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10-ம் வகுப்பு வரை படித்து தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. நகரங்களில் அமைக்கப்படும் நகர தலைமை செயலகத்தில் பணி புரிய இருக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. கிராம, நகர தன்னார்வ தொண்டர்களை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

இந்த நடவடிக்கை மூலம் கிராமங்களில் 99 ஆயிரத்து 144 பேர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். நகரங்களில் 34 ஆயிரத்து 345 பேருக்கு வேலை கிடைக்கிறது. தற்போது ஆந்திராவில் 13 மாவட்டங்கள் உள்ளன. விரைவில் பாராளுமன்ற தொகுதி அடிப்படையில் 25 மாவட்டங்கள் உருவாக உள்ளன.

தற்போது அரசு அலுவலகங்களில் பணி புரியும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 494 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்படுகிறது. இது தவிர தகுதி வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து