முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் கிடைக்கும்: பிவி சிந்து நம்பிக்கை

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

கடந்த 7 மாதங்களாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தவிக்கும் பிவி சிந்து, ஜப்பான் ஓபனில் சாதிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் கடந்த வாரம் நடைபெற்றது. முதல் சுற்றில் இருந்தே இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சிறப்பாக விளையாடினார். ஐந்தாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அகேனா யமகுச்சியிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.பிவி சிந்துவால் கடந்த 7 மாதங்களாக ஒரு சாம்பியன் பட்டத்தைக் கூட வெல்லமுடியவில்லை. இந்த நிலை நாளை தொடங்கும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் முடிவுக்கு வரும் என்று பிவி சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிவி சிந்து கூறுகையில் ‘‘ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் எனக்கு சிறப்பான தொடராக அமைந்தது. இந்தத் தொடரின் உத்வேகத்தை ஜப்பான் ஓபனுக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தோனேசியா ஓபனில் உடற்தகுதி காரணமாக விளையாடாத சாய்னா நேவால், நாளை தொடங்கும் ஜப்பான் ஓபனில் விளையாடுகிறார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எச்எஸ் பிரணோய், கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து