முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் விளையாட்டுக்கு பணம் பயன்படாது-மம்தா

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா :  அரசியல் விளையாட்டுக்கு பணம் பயன்படாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா  பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தியாகிகள் தின பேரணி நடைபெற்றது. அதில்,  மேற்கு வங்காள  முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.
அப்போது  அவர் பேசியதாவது:-

இந்த பேரணிக்கு பொதுமக்களை வரவிடாமல் தடுக்க ரெயில்களை நிறுத்தி விட்டதாக கேள்விப்பட்டேன். பா.ஜனதா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரெயில்களை நிறுத்தலாம். ஆனால், பொதுமக்கள் வருவதை தடுக்க முடியாது.

இன்றைய தினம், சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா தனது கைக்குள் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த விசாரணை அமைப்புகள், பா.ஜனதாவில் சேருமாறும், இல்லாவிட்டால்  சிட்பண்ட் மோசடி வழக்கில் சிறையில் தள்ளிவிடுவோம் என்று திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா பணம் மற்றும் இதர சலுகைகளை காட்டி இழுத்து வருகிறது. ரூ.2 கோடியும், ஒரு பெட்ரோல் விற்பனை நிலையமும் தருவதாக ஆசை காட்டுகிறார்கள்.  

பணம் கொடுத்து சேர்த்தநிலையில், அந்த நபர்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கே திரும்பி விடுகிறார்கள். அரசியல் விளையாட்டுக்கு பணம் பயன்படாது.

கர்நாடகத்தை போலவே, எல்லா இடங்களிலும் பா.ஜனதா குதிரை பேரம் நடத்தி வருகிறது.  நாடாளுமன்றம் சுமுகமாக நடந்ததற்கான பெருமை, எதிர்க்கட்சிகளைத்ததான் சாரும், பா.ஜனதாவை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து