முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உள்ளூரில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலும் ஒரு மாதத்துக்கு அவசர நிலை தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை சிறிசேனா பிறப்பித்து உள்ளார். அவசர நிலை பிறப்பித்து இருப்பதன் மூலம் சந்தேகப்படும் நபர்களை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். அதன்படி குண்டுவெடிப்பை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவசர நிலை மேலும் நீட்டிக்கப்படாது என கடந்த மாதம் சிறிசேனா கூறியிருந்த நிலையில், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து