முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பின் கூற்றுக்கு பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளி பார்லி.யில் அவை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் கூறியதற்கு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது, இரண்டு வாரங்களுக்கு முன் ஜப்பானில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்த போது காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா? என்று கேட்டார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறினேன் என டிரம்ப் குறிப்பிட்டார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக இந்திய தூதர் ஹரிஷ் சிரிங்லாவிடம் அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

எனினும் இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி நீடித்தது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்த போதிலும் எதிர்க்கட்சிகள் ஏற்காமல் கடும் அமளியில் ஈடுபட்டன. இதே போல் மக்களவையிலும் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்காததால் அதிருப்தி அடைந்த அவர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து