முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் மன்னராட்சி நடைபெறுகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் : தி.மு.க.வில் மன்னராட்சி நடைபெறுகின்றது என்றும், ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாரும் உயர் பதவிகளுக்கு வர முடியாது என்றும்  அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.

வேலூர் எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றார். ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். கே.வி.குப்பம் பகுதி காமாட்சியம்மன் கோவில் பேட்டை பகுதியில் நெசவாளர்களோடு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துரையாடினார். அப்போது நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் கொடுத்தனர். நெசவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,

அம்மாவின் வழியில் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகின்றார். ஒவ்வொரு திட்டமும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். சாதாரண ஏழை மக்களின் கஷ்டங்களை, நாடித்துடிப்புகளை அறிந்து எடப்பாடியார் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். விவசாயத்துக்கு அடுத்த படியாக குறைந்த முதலீட்டில் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக கைத்தறி நெசவுத் தொழில் இருந்து வருகிறது. கைத்தறி நெசவுத் தொழில் குடிசை தொழிலாக தங்கள் வாழ்விடத்தில் இருந்தே குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படுகிறது. குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளை சேர்ந்த பலர் கைத்தறி நெசவு தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குடியாத்தம் பகுதிகளில் மட்டும் 30 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் தனியார் மூலம் சுமார் 4 ஆயிரம் நெசவாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழிலை செய்து வருகிறார்கள். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதில் அ.தி.மு.க. அரசு பெரும் பங்காற்றி வருகிறது. கைத்தறி மற்றும் துணித் தொழிலின் வளர்ச்சிக்கு தமிழக அரசிற்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருவது. உற்பத்தி திறனை அதிகரித்து வடிவமைப்பில் புதுமைகளை புகுத்தி நெசவாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் பல நலத் திட்டங்களை கொண்டு சேர்த்து நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்கிறது. அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உங்களுக்காக ஓடோடி உழைக்க கூடியவர். அவரை நீங்கள் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்த கட்சி. தி.மு.க. குண்டர்கள் நிறைந்த கட்சி. அ.தி.மு.க. மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகின்றது. அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க. வழக்குப் போட்டு தடுத்து நிறுத்துகின்றது. தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வைக்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடியார் ஆட்சியில் தான் நல்ல நல்ல புதிய திட்டங்கள் வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதிகள் நன்றாக உள்ளது. எந்த தொழில் செய்பவர்களுக்கும் எந்த இடையூறும் இந்த அரசால் ஏற்படுவது கிடையாது . பொங்கல் பரிசு ரூ.1000 தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைகோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கும் திட்டம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் கொண்டு வந்தார். அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளராக அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளார். அவருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும். தி.மு.க.வில் மன்னர் ஆட்சி நடக்கின்றது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது பேரன் உதயாநிதி ஸ்டாலின், மருமகன் தயாநிதி, மகள் கனிமொழி இப்படி அவர்களது குடும்பத்தினர் மட்டுமே தி.மு.க.வில் உயர்பதவியில் இருக்க முடியும். அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டர் கூட சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும். தமிழக மக்களுக்கு அ.தி.மு.க.வில் மட்டுமே நல்லது செய்ய முடியும். வேலூர் தொகுதி மக்கள் என்றும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து