முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை ஏமாற்றிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்டார் இமாம் -வாசிம் கான்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக், காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண்கள் புகார் கொடுத்திருந்தனர். இதற்காக இமாம் மன்னிப்பு கேட்டதாக வாசிம் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும், அந்த அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் இமாம் உல் ஹக் ஆவார். இமாம், தங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக 8 இளம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து ஒரு நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில பெண்களுடன் இமாம், நடத்திய வாட்ஸ் அப் சாட்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள சாட்டில், இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர்களின் புகைப்படங்களையும் கேட்டுள்ளார். பின்னர் நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால், என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் இமாம் பதில் கூறியுள்ளார். இந்த சாட்களை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், இமானுக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு இமாம் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான் கூறுகையில், 'இந்த விவகாரம் இமாமின் தனிப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இமாமிடம் பேசினேன். அவர் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். வீரர்கள் ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.இதைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாட்டுக்காக விளையாடும் அதே சமயத்தில் அவர்களுக்கு பொறுப்பும் உள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காது என நம்புகிறோம்'

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து