முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது - 99 பேர் ஆதரவு: அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு:

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதாவை பாராளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள் தலாக் என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதா பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. அதன்பின், புதிய அரசு பொறுப்பேற்று மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்தலாக் மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஜூலை 25-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்து, ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், மனிதநேய எண்ணம் கொண்டது முத்தலாக் தடை மசோதா. இந்த மசோதா நீதிக்கானது. மத ரீதியிலானது அல்ல. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம். மேலும் பெண்களின் மாண்பையும், அவர்களது அதிகாரத்தையும் நிலைநிறுத்தக்கூடியது என்று தெரிவித்தார். 

அதை தொடர்ந்து மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.  மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவை பாராளுமன்ற சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். முன்னதாக அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மசோதா மீதான விவகாரத்தில் பேசிய அ.தி.மு.க. எம்.பியான எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, சிறப்புக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து அப்போது அவையில் இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அ.தி.மு.க. கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஓட்டெடுப்பில் டி.ஆர்.எஸ்., தெலுங்கு தேசம், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அனைத்து கட்சிகள் பேசிய பின்னர், அனைவருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலளித்து பேசினார். இதன் பின்னர், ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிராக 84 ஓட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம் இந்த மசோதா நிறைவேறியதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். விரைவில் இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து