முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி வரும் ஆண்டுகளிலும் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,            மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பொருளாதார உச்ச வரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம்  தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-2018 மற்றும்  2018-2019  ஆகிய  இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட 7,39,636  மிதிவண்டிகள் உட்பட மொத்தம் 10,87,147 மிதிவண்டிகள்  2018-2019-ல் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக  2019-2020-ம் ஆண்டிற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ரூ.7,300 லட்சம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.6,548.11 லட்சம் ஆக மொத்தம் ரூ.13,848.11 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்  11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கும் தொடர்ந்து  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். இத்திட்டம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து