முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் சாலையோர வடிகாலில் கிடந்த முதலை

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மராட்டியத்தில் சாலையோர வடிகாலில் 8 அடி நீள முதலை கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. மராட்டியத்தின் கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான ரத்னகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை குறைந்து வெள்ள நீர் வடிந்ததால் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. இந்த சூழலில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லன் தாதர் பகுதியில் உள்ள சாலையோர வடிகாலில் 8 அடி நீள முதலை ஒன்று கிடந்தது உள்ளூர்வாசிகளை பீதியில் ஆழ்த்தியது. வடிகாலில் முதலை கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

கடந்த 26-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வஷித்ரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நகரின் வெள்ளநீர் வடிகால் மூலமாக இப்பகுதிக்கு முதலை அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதலை மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து