முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துணை ராணுவம் குவிப்பு: அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட வேண்டும் என மெகபூபா கோரிக்கை

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

காஷ்மீர் : காஷ்மீரில் 10 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் விதமாக 10,000 துணை ராணுவப் படையினரை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு 2 நாட்கள் முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அம்மாநிலத்தில் தங்கியிருந்து சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். வடக்கு காஷ்மீரில் ராணுவப்படை எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 100 கம்பெனி ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே அமர்நாத் யாத்திரையில் போது காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்ககு கூடுதலாக 40,000 துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் 10 ஆயிரம் துணை ராணுவப்படையை குவிப்பதன் மூலம் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார். மேலும் காஷ்மீர் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து கட்சியினரையும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்று திரட்ட வேண்டும் என்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் மெகபூபா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து