முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

200 யூனிட் வரை மின் கட்டணம் கிடையாது - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் 200 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் கிடையாது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

டெல்லியில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் கிடையாது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 201 யூனிட் முதல் 400 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு பாதிக்கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் டெல்லியில் தான் மின்சாரம் வழங்கப்படுவதாகவும், இந்த சலுகை மூலம் மின்சாரம் சேமிக்கப்படுவது ஊக்குவிக்கப்படும் என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. டெல்லி சட்டசபைக்கு 2020-ன் துவக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். முன்னதாக, மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அவர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து