முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்னரை கடுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்கள்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பர்மிங்காம் : ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கடுப்பேற்றியுள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது உப்புத்தாளை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர். தவிர, ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பி.சி.சி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர். செய்தியாளர் சந்திப்பின் போது மக்களிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முக்கிய தொடராக பார்க்கப்படும் ஆஷஸ் தொடர்  தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்க ஓவர்களை பேட்ஸ்மேனை திணறடிக்கும் விதமாக ஆன்டர்சனும், ப்ராடும் வீசினர். இதனால், வார்னர் 2 ரன்களில் வெளியேறினார். வார்னர் அவுட் ஆகி வெளியேறும் போது அவரை கடுப்பேற்றும் விதமாக, மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் உப்புத்தாளை வெகுநேரம் காண்பித்து வழியனுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து