முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மெட் அணிந்தவருக்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை - பெங்களூரில் நாளை முதல் அமல்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : பெங்களூருவில் ஹெல்மெட் அணிந்தவருக்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நாளை திங்கள் கிழமை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஹரிசேகரன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் அதிகரித்து வரும் விபத்துகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இரு சக்கரவாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்துகளை முழுமையாக குறைக்க முடியவில்லை. தற்போது விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஷெல் உள்ளிட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இது குறித்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 5-ம் தேதி முதல் பெங்களூருவில் அமலுக்கு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து