முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எல். திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

திண்டுக்கல் : டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 20 -வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 99 ரன்களும், கே.முகுந்த் 43 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஜெ.கவுசிக் 2 விக்கெட்டுகளும், முகமது 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை (182 ரன்கள்) எட்டியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் சதம் அடித்து அசத்தினார். பொறுப்புடன் அணியின் வெற்றிக்காக போராடிய ஜெகதீசன் 105 (60) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் விவேக் 29 ரன்கள் எடுத்தார். திருச்சி வாரியர்ஸ் அணியில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும், சரவணகுமார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து