முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: 20 பேர் பலி - அதிபர் டிரம்ப் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

எல் பேஸோ : அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பேஸோ நகரில் அமைந்த வணிக வளாகம் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் பேட்ரிக் கிரஸ்சியஸ் என்ற நபர் ஈடுபட்டு உள்ளார். எனினும், சந்தேகத்திற்குரிய 3 நபர்களை கைது செய்திருக்கிறோம் என மேயர் டீ மார்கோ கூறியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கோழைத்தனமான செயல் என அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு துயரமானது. இது மிகவும் கோழைத்தனமான செயல் என பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வருகிறார். அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் டிரம்ப், கண்டனமும் தெரிவித்துள்ளார்.  கடந்த செவ்வாய் கிழமை மிஸ்ஸிஸிப்பியில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதே போன்று கடந்த ஞாயிற்று கிழமை வடக்கு கலிபோர்னியாவில் உணவு திருவிழா ஒன்றில் 19 வயது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து