ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா:

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
4 rms temple

 ராமேசுவரம்,  ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும்  ஆடிதிருவிழாவை முன்னிட்டு 11 ஆவது நாள் நிகழ்ச்சியான  சுவாமி,அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி தபசு மண்டகபடியிலும், நள்ளிரவில் பூ பல்லக்கில் சுவாமி,அம்மன் எழுந்தருளி நான்கு ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 25 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு விமர்சையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 11  ஆவது  நாள்  நிகழ்ச்சியான ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்று மாலையில் 3 மணியளவில் ராமேசுவரம் இராமதீர்த்தம் பகுதியிலுள்ள திருக்கோயில் தபசு மண்டகப்படியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருக்கோவிலிருந்து அலங்காரத்துடன் தங்க ரிஷிப வாகனத்தில் சுவாமி,அம்மன் புறப்பட்டு நான்கு ரத வீதியாக  தபசு மண்டகப்படியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலுக்கு வந்தடைந்தது.பின்னர் அங்கு சுவாமி,அம்மனுக்கு  சிறப்பு பூஜைகளும்,தீபாராதணை வழிபாடுகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து கோயிலின் மூத்த குருக்கள் விஜய் போகில்,விஜய் ஆனந்த் ஆகியோர்கள் சுவாமி,அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதணை வழிபாடும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து அருள்பெற்றனர். மேலும் நிகழ்ச்சியையொட்டி சுவாமி,அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூபல்லக்கில் தபசு மண்டகப்படியிலிருந்து நேற்று நள்ளிரவில் புறப்பாடகி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு  காட்சியளித்து இன்று திங்கள் கிழமை அதிகாலையில் திருக்கோயிலுக்கு வந்தடைந்தது.  இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி,உதவி ஆணையர் ஜெயா,மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள்  ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன், திருக்கோவில் பேஷ்கார்கள்,அண்ணாதுரை,செல்லம், கண்ணன்,கலைச்செல்வம்,இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கமலநாதன், கோயில் அலுவலர்கள்   உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து