வர்த்தகத்தில் முன்னுரிமை பட்டியலில் இருந்து ஜப்பானை நீக்கிய தென்கொரியா

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      உலகம்
sourth korea reject japan 2019 08 12

சியோல் : வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது.

இது குறித்து தென்கொரியாவின் வர்த்தக அமைச்சரான சங் யுன் மோ நேற்று (திங்கட்கிழமை) கூறும் போது, எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியுள்ளது என்று தெரிவித்தார்.

தென்கொரியாவின் வர்த்தகத்தை கீழிறக்க சமீபத்தில் ஜப்பான் எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த முடிவை தென்கொரியா எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், வர்த்தக முன்னுரிமை பட்டியலிலிருந்து ஜப்பான் நீக்கப்பட்டதற்கான முழுமையான விவரத்தை தென்கொரியா தெரிவிக்கவில்லை.  ஜப்பானுக்கு எதிராக தென்கொரியா எடுத்துள்ள இந்த மாற்றங்கள் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தென்கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து