முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிவாசல்களில் தொழுகை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல்லில் பேகம்ஞீர் பெரிய பள்ளிவாசலில் அதிகாலை நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் திண்டுக்கல் சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் நாகல்நகர், பஸ் நிலையம், ரவுண்ட் ரோடு, முகமதியார்புரம், செல்லாண்டி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
அதன்பின் பண்டிகையின் முக்கிய குறிக்கோளான குர்பானி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்ரீத் பண்டிகைக்காக வாங்கப்பட்ட ஆடுகளின் இறைச்சி 3 பங்காக பிரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி உறவினர்களுக்கும், ஒரு பகுதி ஏழைகளுக்கும், மீதமுள்ள பகுதி தங்கள் குடும்பத்திற்கும் என பிரித்து வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து