அத்திவரதரை தரிசனம் செய்தார் தெலுங்கானா முதல்வர்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
chadrasekararao visit athivarathar darshan 2019 08 12

காஞ்சீபுரம் : காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று தரிசனம் செய்தார்.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்று பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

இந்நிலையில் 43-வது நாளான நேற்று அத்திவரதர், மஞ்சள் மற்றும் பச்சைப்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார். சந்திரசேகர் ராவுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து