தந்தையுடன் பாஜகவில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Babita bohat with father join BJP 2019 08 12

புது டெல்லி : காமென்வெல்த் போட்டிகளில் தேசத்துக்காக பதக்கங்களைக் குவித்த மல்யுத்த வீராங்கனை, பபிதா போகத் தனது தந்தை மஹாவீர் போகத்துடன் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலம் இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பிரபல முகமான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், அவரது தந்தை மஹாவீர் போகத் ஆகியோர்  நேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அரியானாவில் தற்போது பா.ஜ.க. ஆட்சியே நடக்கிறது. இருந்தாலும், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தலை சந்திக்கவுள்ளதால் கட்சியில் இத்தகைய பிரபலங்களைச் சேர்ப்பது தங்களுக்கு பலம் சேர்க்கும் என மாநில பா.ஜ.க. கருதுகிறது. அதனால், பா.ஜ.க. அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் இந்த இணைப்பு நடந்தது. இணைப்புக்குப் பின்னர் பபிதா போகத்தும், மஹாவீர் போகத்தும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அரியானா பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவிற்கு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பபிதா,

நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி. 2014-ல் இருந்து அவரின் தீவிர ரசிகையாக இருக்கிறேன். அவர் இத்தேசத்திற்காக நிறைய சேவை செய்திருக்கிறார். விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் பா.ஜ.க.வில் இணைவது தள்ளிப்போனது. இதோ இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து வரலாற்றை தங்க வரிகளால் பா.ஜ.க. எழுதியுள்ளது. இத்தருணத்தில் கட்சியில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த வேளையில், என்னைப் போலவே பலரும் பா.ஜ.க.வில் இணைய விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

இணைப்பு விழாவில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பபிதா போகத் இந்நாட்டின் இளைஞர்களுக்கு ஓர் உந்து சக்தி. அவர் பா.ஜ.க.வில் இணைந்ததில் மகிழ்ச்சி. கட்சியில் இணைந்தாலும்கூட அவர் விரும்பினால் மீண்டும் அவர் விளையாட்டில் முன்னுதாரணமாக செயல்பட ஒரு விளையாட்டு அமைச்சராக எனது கடமைகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று பேசினார். கடந்த 2016-ம் ஆண்டு ஆமீர்கான் நடித்த டங்கல் படத்தின் கருவே பபிதா, கீதா போகத் சகோதரிகளும் அவரது தந்தை மஹாவீர் போகத்தும்தான். அரியானாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஆணாதிக்கம் நிறைந்த ஒரு விளையாட்டில் எப்படி தனது இரண்டும் மகள்களையும் சாதனை மங்கைகளாக ஒரு தந்தை மாற்றுகிறார் என்பதையே அந்தப் படம் கொண்டாடியிருக்கும்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து