பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை உருவாக்க முயலும் அமெரிக்கா: ஈரான்

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      உலகம்
US unres region-Iran 2019 08 13

டெக்ரான் : தங்கள் பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கிறது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் அதன் பிராந்தியத்தில் தனது படையை அதிகரித்து வருவதால் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது. உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹோர்மஸ் நீரிணைப்புப் பகுதியில் ஈரானின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு சர்வதேச கடற்படை கூட்டணிக்கு டிரம்ப் நிர்வாகம் நட்பு நாடுகளை நாடியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறும் நிலையில் அமெரிக்கா இல்லை. இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மை நிலவுவதற்கு அமெரிக்கா காரணமாக உள்ளது. நாங்கள் வேண்டுவது எங்கள் பிராந்தியத்தில் அமைதியான நிலைமை. எங்கள் பிராந்தியத்தில் வசிக்கும் அனைவருக்கும் அமைதியான நிலை. நான் ஒன்றைத் தெளிவாகக் கூறுகிறேன். நாங்கள் யாருடனும் போரை விரும்பவில்லை. நாங்கள் யாருடனும் மோதலை விரும்பவில்லை. நாங்கள் வேண்டுவது எங்கள் மக்களுக்கான முன்னேற்றம். எங்கள் பிராந்தியத்துக்கான முன்னேற்றம். நீங்கள், இந்தப் பிராந்தியத்திற்கு வரும் அச்சுறுத்தல் குறித்துப் பேசுகிறீர்கள் என்றால், அந்த அச்சுறுத்தல்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால்தான் வருகின்றது என்று ஜாவத் சாரிப் தெரிவித்துள்ளார். மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதையும் சாரிப் விமர்சித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து