திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை:

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      மதுரை
13 admk booth kamilir

திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,திருமங்கலம்  ஒன்றிய பூத்கமிட்டி  நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழகஅம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிடும் வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு பயணியர் மாளிகை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் தலைமை வகித்தார்.முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்  முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் அன்னக்கொடி,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அனைத்து பூத்கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அம்மாவின் மறைவுக்கு பின்னர் ஸ்டாலின்முதல்வராகி விட்டது போலவும்,முதல்வருடைய  காரில் செல்வது போலவும் கனவு கண்டு கொண்டிருந்தார்.அவருக்கு தமிழக மக்கள் ஆப்பு வைத்துவிட்டனர்.அம்மா இல்லாமல் நாம் எப்படி வழிநடத்தப்படப் போகிறோம் என்று அனைவரும் அச்சப்பட்ட நேரத்தில் முதல்வர் எடப்பாடியாரும்,துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இந்த இயக்கத்தை கட்டிக் காத்து வருகின்றனர்.இதற்கு காரணம் கிளை கழக செயலாளர்களும்,அடி மட்டத் தொண்டர்களும் தான்.உலகத்திலே தொண்டர்களால் ஒரு இயக்கம் நடத்தப்படுகிறது என்று சொன்னால் அது அ.தி.மு.க மட்டுமே.இனி வருகின்ற காலம் நமக்கு எளிமையான காலமாக இருக்காது. வரும் காலத்தில் நாம் உறுதியுடன் செயல்பட்டு எதிரிகளிடத்தில் நமது கட்சியையும் சின்னத்தையும் விட்டுவிடக்கூடாது.எம்.ஜி.ஆரும் அம்மாவும் கட்டிக் காத்துவந்த இந்த இயக்கத்தை நாம் உயிரைக் கொடுத்தேனும் பாதுகாத்திட வேண்டும்.ஓட்டு அதிகமாக வாங்கினால் தான் கிராமத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும்.வரும் உள்ளாட்சி தேர்தலிலும்,இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போதும் நமது கண்ணுக்கு தெரிவதெல்லாம் இரட்டைஇலை சின்னமாக மட்டுமே இருக்க வேண்டும்.

இயக்கத்தை காப்பாற்றிடும் பொறுப்பில் நாம் இன்றைக்கு தியாக வேள்வி செய்து வருகிறோம்.அதன்படி தாய்வீட்டை விட்டு தனிக்குடித்தனம் போனவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்திட வேண்டும்.எங்கே இரட்டை இலை சின்னம் இருக்கிறதோ,எங்கே அண்ணா படம் தாங்கி கழக கொடியிருக்கிறதோ அங்கு தான் நாம் இருக்க வேண்டும்.இது தான் இலக்கணம்.அனைவரையும் அரவணைத்து பூத் கமிட்டியில் இடம் பெறச் செய்து வெற்றிக்கு வழிகாண வேண்டும்.வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தை வெற்றி பெறச்செய்வது நமது அனைவரின் கடமையாகும்.இங்கு 310 பூத்களில் 2.62லட்சம்வாக்குகள் உள்ளது.பூத் கமிட்டியில்உள்ள ஒவ்வொருவருக்கும் 50ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வாக்காளர்களை சந்தித்து ஓட்டுக்களை கழகத்திற்குஆதரவாக்குவது உங்களது இலக்காக இருக்க வேண்டும்.களப்பணியில் சோர்வு ஏற்படாமல் உழைத்து வெற்றியினை கழகத்திற்கு ஈட்டித் தந்திட வேண்டும்.இல்லாவிட்டால் அமைதியாக உள்ள தமிழகம் எதிர்கட்சியினரின் பிடியில் சிக்கி நாட்டையே பட்டா போட்டு பிரித்துக் கொள்ளும் நிலை உருவாகிடும். வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வெற்றிபெற வைத்துவிட்டோம் என்றால் ஆயுளுக்கும் தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது.ஏற்கெனவே தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலினை வைத்து கசமுசா நடக்கிறது.அதை வெளியே தெரியாமல் மூடி மறைத்து வருகின்றனர்.என்றைக்காவது அந்த பிரச்சனை வெடித்தே தீரும்.பூத் கமிட்டியை சிறப்பாக அமையுங்கள் மக்களை நாள் தோறும் சந்தித்திடுங்கள் விசுவாசத்துடன் களப்பணியாற்றுங்கள் கழகத்திற்கு வெற்றி நிச்சயம்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,திருப்பதி,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதி சாமிநாதன்,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம், பழனிச்சாமி,ஆறுமுகம்,தர்மர்,கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன், கட்சி நிர்வாகிகள் சாமிநாதன்,சிவன்காளை,பாலமுருகன்,சரவணபாண்டியன்,ஆனந்தன்,கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து