முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி தந்த அத்திவரதர். இந்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அத்தி வரதரை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து தரிசித்து செல்கின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் அத்திவரதரை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, வரும் 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது என்றும் 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. அத்திவரதர் வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, தரிசனத்தை நீட்டிக்க போவதில்லை என அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்றும் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து