முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நடப்பதை கண்டு உலகம் அமைதியாக இருக்கப் போகிறதா? இம்ரான்கான் கேள்வி

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

காஷ்மீரில் நடப்பதைக் கண்டு உலகம் அமைதியாக இருக்கப் போகிறதா என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காஷ்மீரில் 12-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. ஸ்ரீபிரன்னிசாவில் நடந்த இன அழிப்பைக் கண்டு உலக நாடுகள் அமைதியாக இருந்ததைப் போல காஷ்மீரில் நடப்பதைக் கண்டு உலகம் அமைதியாக இருக்கப் போகிறதா? இது போன்ற நிகழ்வுகள் நடக்க அனுமதித்தால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் சர்வதேச சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இதனால் முஸ்லிம் நாடுகளில் வன்முறை ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பெரிய அளவில் எதிர் வினையாற்றும் என இந்தியா எதிர்பார்த்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தூதரக உறவுகளைத் துண்டித்ததோடு, இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து