முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- கொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி153வது ஆண்டுபெருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  இதனையொட்டி  சிறப்பு நவநாள் திருப்பலிகள் நடைபெற்றன. பெருவிழாவின் முக்கிய நாளான நேற்று இரவு (14) அன்னைையின் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதற்கு திரு இருதய ஆண்டவர் ஆலய வட்டார அதிபர் அருட்தந்தை எட்வின் சகாயராஜா தலைமை வகித்தார். உதவிபங்குத்தந்தையர்கள் டேவிட்குமார்.  சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் . அந்தோணி பாப்புசாமி தலைமைை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தினார். இதில் முன்னாள்நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இபுராகிம், கோவிந்தன், எட்வர்டு, மற்றும் மெர்சி செந்தில் உட்பட இறை மக்கள் மற்றும் பல்வேறு ஆலய பங்குத்தந்தையர்கள்,
அருட்சகோதரிகள்,பங்குமக்கள், மற்றும் பல்வேறு சமுதாய பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
  அதனை தொடர்ந்து அன்னையின் மின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் வீதிகள் வழியாக பவனி வந்து இன்று (I5) அதிகாலை 6 மணிக்கு மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தது. இதில் நள்ளிரவு திருப்பலியினையும் மறையுரையையும் சகாய ஞான பிரித்குமார் வழங்கினார். தொடர்ந்து அதிகாலை அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் விடுதலைப் பெருவிழா திருப்பலியினைை பேராயர் இல்லத்தை சேர்ந்த ஜான்திரவியம் நிகழ்த்தினார், தொடர்ந்து சுதந்திரதின விழாவை யொட்டி தேசிய கொடியினை பங்குத்தந்தை பிரிட்டோ ஏற்றி வைத்தார்.
 அதனைத் தொடர்ந்து பகல் நேர சப்பரபவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது அங்கு நற்கருணை ஆசீருடன் கொடியிறக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது
 இதற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சாயராஜா பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் மற்றும் பங்குத் தந்தையர்கள், இறைமக்கள், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
 பெருவிழாவினை முன்னிட்டு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் சார்பில் இன்னிசை நிகழ்ச்சியும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவையொட்டி பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடிய விடிய இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலிசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து