முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விசாரணை குமாரசாமி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, எனது தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்சியை இழந்த பிறகு, இந்த விவகாரத்தில் என் மீது புகார் கூறுவது ஏன்? பா.ஜ.க. ஆட்சி நடைபெறுவதால் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ம.ஜ.த. முன்னாள் எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் என் மீது இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. கடந்தாண்டில் ஒரு சிலர் என்னிடம் எப்படி நடந்து கொண்டுள்ளனர் என்பதனை நான் அறிவேன். ஆனால், யாரைப் பற்றியும் இப்போது நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே தெரியவரும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து