முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படுகொலையான டாஸ்மாக் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி: மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

கிருஷ்ணகிரியில் படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரது மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், நெடுசாலை கிராமம், ஆவல்நத்தம் கூட்டு ரோடு சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த மருதை என்பவரின் மகன் எம்.ராஜாமீது, கடந்த 14-ம் தேதி கடையினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில், அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராஜா குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், மறைந்த. ராஜா குடும்பத்திற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திலிருந்து குடும்ப நல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத்திட்டம் ஆகியவற்றின் பணப்பயன்கள் மற்றும் சட்ட ரீதியான இதரபணப் பலன்களையும் உடனடியாக வழங்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அன்னாரது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவரது மனைவிக்கு, அவரது கல்வித் தகுதிக்கேற்ப சத்துணவு அல்லது அங்கன்வாடி மையத்தில் பணிவழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படிகடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து