முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் 28-ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

தேனி : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு வரும் 28-ம் தேதி நீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக சாகுபடி ஜூனில் துவங்குவது வழக்கம். இதற்கு மே இறுதியில் இப்பகுதி விவசாயிகள் நாற்றுப்பாவு செய்து முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பிற்காக காத்திருப்பர். இதனைத் தொடர்ந்து ஜூனில் துவங்கி ஆகஸ்ட் வரை குறைந்தது 90 நாட்கள் 400 கனஅடி வீதம் நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை உரிய நேரத்தில் துவங்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கேரளாவில் மழைப் பொழிவு அதிகரித்து அணை நீர்மட்டமும் திருப்திகரமாக உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 554 கனஅடி நீர்வரத்தும், ஆயிரத்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. அணையின் நீர்மட்டம் 131.50 அடியாக உள்ளது.

கேரளப் பகுதியில் குறைந்திருந்த மழை தற்போது மீண்டும் சாரலாக உருவெடுத்துள்ளது. எனவே நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

இவற்றை எல்லாம் குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிற்கு அணையில் இருந்து நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது. வரும் 28-ம் தேதி நீர் திறப்பு இருந்தால் விவசாயத்திற்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த தேதியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முதல்போக சாகுபடி பாதிப்பு, தற்போதைய நீர்இருப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட தேதியை குறிப்பிட்டிருந்தாலும் அவசரநிலை கருதி முன்னமே திறக்க வாய்ப்புள்ளது என்றனர். 400 கனஅடி வீதம் 90 முதல் 120 நாள் வரை இந்த நீர்திறப்பு இருக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து