முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையான முதலாமாண்டு விளையாட்டுப்போட்டிகள்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர் -விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலத்துறை மற்றும் தி இராம்கோ சிமிண்ட்ஸ் லிமிடெட்   இணைந்து  ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையான  முதலாமாண்டு விளையாட்டுப்போட்டிகள் தடகள விளையாட்டுப் போட்டிகள்மாவட்ட விளையாட்டரங்கில் வைத்து நடத்தப்பட்டன.
 இந்நிகழ்வில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  கலந்து கொண்டு ஓட்டம்,தொடர் ஓட்டம், குண்டு எறிதல்,நீளம் தாண்டுதல்போன்ற விளையாட்டுப் போட்டிகளில்  தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
    மேலும்குழு   விளையாட்டுப்போட்டிகளில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு  கபாடி,கைப்பந்து,கோகோ, போன்ற போட்டிகளில் தங்கள்  திறமையை வெளிப்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள *19 ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆசிரிய ஆசிரியைகளும்மற்றும் 56 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளைச்  சார்ந்த விடுதி காப்பாளர் காப்பாளினிகளும் மாணவ மாணவிகளுடன் கலந்து கொண்டனர்
பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பங்கேற்று, வெற்றி பெற்ற 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சுழற்கோப்பையினை வழங்கி ஊக்கப்படுத்தினார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் லட்சுமி பிரியா முன்னிலை வகித்தார்
இவ்விழாவில் மகளிர் திட்ட அலுவலர் தேவேந்திரன்,ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர்  முருகேசன் மற்றும் திருவில்லிபுத்தூர் அருப்புக்கோட்டை விருதுநகர் கோட்டங்களைச் சார்ந்த ஆதிந தனிவட்டாட்சியர்களுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்,பிரமிடு உள்ளிட்ட  கலைநிகழ்ச்சிகளும்
 நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளை சுந்தரராசபுரம் உடற்கல்வி ஆசிரியர்  ஜெயக்குமார்  ஒருங்கிணைத்து நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து