முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே விவசாயிகள் ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தேனி
Image Unavailable

போடி, -   போடி அருகே , பாரத பிரதமரின் விவசாயி ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களிலும் நடைபெற்ற முகாம்களில் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர்.
     பாரத பிரதமரின் விவசாயி ஓய்வூதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்திரவின் பேரில் தேனி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் போடி, தேனி, கடமலைகுண்டு மயிலாடும்பாறை, உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வேளாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது.
     போடி உதவி வேளாண்மை அலுவலகம் சார்பில் போடி நாகலாபுரம் கிராமத்தில் புன்னியவதியம்மன் கோவிலில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை அலுவலர் அம்பிகா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, வட்டார தொழில்நுட்ப அலுவலர் செல்லப்பாண்டி, உதவி தொழில்நுட்ப அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
     மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மைய இயக்குநர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்தனர். அப்போது வேளாண்மை துறை அலுவலர்கள் கூறுகையில், பாரத பிரதமரின் விவசாயி ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளும், 40 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளின் மனைவி, குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம்.
     மாத பிரிமிய தொகையாக ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு 61 வயது முதல் ரூ.3 ஆயிரம் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படும். அவர் இறந்து விட்டால் அவரது வாரீசுதாரருக்கு ரூ.1500 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படும்.  இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் போடி நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களுக்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். போடியில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
     இதேபோல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். முகாம்களுக்கான ஏற்பாடுகளை பொது சேவை மையங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். ஆனந்தராஜ்  மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து