முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்யும் - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கணிப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பானாஜி : பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் என்று நம்புகிறேன் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பானாஜி நகரில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேசியதாவது:-

வரும் நாட்களில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஏராளமான முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. அவை அனைத்தும் ஆலோசனை நிலையில், தயாராகவும் இருக்கின்றன. இந்த முடிவுகளை எடுத்த பின், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மாற்றாக எந்த அரசும் வர முடியாது. மாநிலத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை திட்டத்துக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் நாட்டை ஆட்சி செய்யும் என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தான் நாட்டை ஆள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆண்ட முந்தைய பா.ஜ.க. அரசு ஏராளமான நலத்திட்டங்களைச் செய்துள்ளது. விரைவில் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் வருவார் என்று நம்புகிறேன். மத்தியப் பிரதேச மக்கள் சிவராஜ் சிங் சவுகானையும், அவரின் அரசையும் இழந்து விட்டனர். மாமாஜி, லாட்லி லட்சுமி ஆகிய திட்டங்கள் சிவராஜ் சவுகான் அறிமுகம் செய்த திட்டங்களில் முக்கியமானவை. மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் வருவார் என்று உறுதியாகக் கூறுகிறேன். கடவுளிடம் பிரார்த்திப்பேன். மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வரான பின் நான் மத்தியப் பிரதேசம் செல்வேன். இவ்வாறு பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து