முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டரில் சமோசா சாப்பிடும் ராகுல்: வைரலாகும் போலி வீடியோ

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

கொச்சி : ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி சமோசா சாப்பிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் பரப்பப்படும் தகவலின் உண்மை பின்னணியை பார்ப்போம்.

பிரபல எழுத்தாளர் மது பூர்னிமா கிஷ்வார் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சமோசா சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவிட்டு வயநாட்டு எம்.பி. கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் விதம் என டுவீட் செய்திருக்கிறார். கிஷ்வார் டுவிட்டர் பதிவில், கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை வயநாடு எம்.பி. ஆய்வு செய்யும் விதத்தை பாருங்கள் என கிண்டலடிக்கும் வகையில் தலைப்பு பதிவிடப்பட்டுள்ளது.

உண்மையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் போது ராகுல் காந்தி சமோசா சாப்பிட்டாரா என ஆய்வு செய்ததில், மது பூர்னிமா வெளியிட்டிருக்கும் வீடியோ நான்கு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வைரல் வீடியோ அடங்கிய பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சமோசா சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வீடியோ ஏப்ரல் 24-ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவின் வயநாடு எம்.பி. என்ற வகையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆகஸ்ட் 12-ம் தேதி ராகுல் காந்தி ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் ராகுல் காந்தி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது டுவிட்டரில் பதிவிட்டார். அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோவிற்கும் ராகுல் காந்தியின் வயநாடு ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. வைரல் வீடியோ நான்கு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து