முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகளின் புகலிடம் முற்றிலுமாக அழிக்கப்படும் - ஆப்கன் பிரதமர் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் கனி உறுதிபட கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். திடீரென இந்த நிகழ்ச்சியின் மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புதான் காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கனி கூறியதாவது,

காபூல் திருமண சம்பவம் மிகவும் கொடூரமான ஒன்றாகும். உயிரிழந்த மக்களுக்கு அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என உறுதியாக கூறுகிறேன் என்றார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தினால் கோபமடைந்த மக்கள், 18 வருடங்களாக பயங்கரவாதிகள் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு வருகிறோம். அமெரிக்க - தலிபான் அமைதி பேச்சுவார்த்தை இதை முடிவுக்கு கொண்டு வருமா? என அரசுக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இது பற்றி அமெரிக்க தூதுவர் கூறுகையில், தலிபான்கள் உடனான அமைதி பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் பயங்கரவாத கூட்டமைப்புகளை முறியடிக்க உதவும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து