முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா - தினகரன் தவிர யார் வேண்டுமானாலும் அ.தி.மு.கவில் சேரலாம்: அமைச்சர் ஜெயகுமார்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.கவில் சசிகலா, தினகரன் தவிர யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தீபா, மாதவன் ஆகியோர் அ.தி.மு.கவில் இணைந்து செயல்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைய வேண்டும், என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். சசிகலா, தினகரன் தவிர யார் வந்தாலும் அ.தி.மு.கவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
அத்திவரதர் உண்டியல் பணம் வசூல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்.,

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். எனவே அதில் யாரும் கை வைக்க முடியாது. அதற்கான உண்டியல் பணம் ரூ.7 கோடி வரை வந்திருப்பதாக கலெக்டர் தெரிவித்திருக்கிறார். மேலும் எண்ணப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினால் பதிலளிக்கப்படும், அதில் அரசு வெளிப்படையாக இருக்கிறது. எவ்வளவு உண்டியல் வசூல் என்பதை மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும்.

இதுகுறித்து வாட்ஸ் அப், சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை வைத்து எதுவும் சொல்ல முடியாது. உயிருடன் இருப்பவர்களையே இறந்ததாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுவதால் அதை பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. நாற்பதாண்டுகள் கழித்து அத்திவரதர் வைபவம் நடைபெறுவதால் அந்த தரிசனத்திற்காக மக்கள் பாதுகாப்பை தான் பார்க்க முடியும், 21 கோடி செலவுக்கணக்கையெல்லாம் பார்க்க முடியாது. இதில் முதலீடு லாப நஷ்ட கணக்கெல்லாம் பார்க்க முடியாது. இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து