முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி 'டி.வி.' வரும் 26-ல் துவக்கம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 26-ம் தேதி துவக்கப்பட உள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில், பாட திட்டம், பொது தேர்வு மற்றும் பாட பிரிவுகளில் மாற்றம், ரேங்கிங் முறை ரத்து, தேர்வு எண்ணிக்கை குறைப்பு, பிளஸ் 1-க்கு பொது தேர்வு அறிமுகம் என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழியே மட்டுமின்றி டிஜிட்டல் வழியிலும், வீடியோ கான்பரன்ஸ் வழியாகவும், பாடங்கள் நடத்தும் புதிய திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி, பள்ளி கல்வி நிகழ்ச்சிகளையும், பாடங்களையும் ஒளிபரப்ப, கல்வி, 'டி.வி.' என்ற தொலைக்காட்சி அறிமுகமாகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள், ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், வரும் 26-ம் தேதி முதல் ஒளிபரப்பு துவங்க உள்ளது. கல்வி 'டி.வி'யை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துவக்கி வைக்க உள்ளார். இந்த 'டி.வி.க்கு, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், ஸ்டூடியோ அமைக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து