முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியால் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன், பிரதமர் மோடி காட்டில் பயணித்தார். இந்த நிகழ்ச்சி உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் வெர்சஸ் வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த 12-ம் தேதி இரவு 9 மணி அளவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிதான் உலக அளவில் அதிக டிரெண்டான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது என பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதில், உலகிலேயே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வாக பிரதமர் மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது இப்போது அதிகாரப்பூர்வமானது. இந்நிகழ்ச்சி டுவிட்டரில் 3.6 பில்லியன் பதிவுகளை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.  ஏற்கனவே சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றதற்கான சாதனை படைத்திருந்த சூப்பர் பவுல் 53 எனும் நிகழ்ச்சியின் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு காரணமாக ஒவ்வொருவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து