முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.கவை தடை செய்ய மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

தி.மு.கவை தடை செய்ய மத்திய அரசு தயங்க கூடாது என்று மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாகம் தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில் பங்கேற்ற மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை என்று தி.மு.க வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அந்த வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படியே போனால் நாளை தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று தி.மு.க கருத்து தெரிவிக்கக்கூடும். எனவே தி.மு.கவை தடை செய்ய மத்திய அரசு தயங்க கூடாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, ஒரு சந்தர்ப்பவதாக கூட்டணி, கொள்கையற்ற கூட்டணி, தேர்தலுக்கான  அமைக்கப்பட்ட கூட்டணி எப்போது வேண்டுமானாலும்  நெல்லிக்காய் மூட்டை போல தி.மு.க கூட்டணி  சிதறும்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தில் ஒரு கோடி பேர்  தரிசனம் செய்துள்ளனர். அரசு நிர்வாகம் முழுமையாக  முடுக்கிவிடப்பட்டு அனைவரும் தரிசனம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தற்போது  வரை ஏழு கோடி ரூபாய் எண்ணப்பட்டு உள்ளது என  தெரிவித்துள்ளார். இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  வேண்டும் என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிப்படையாக கேட்டுப் பெறலாம்.

பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி தரவேண்டும்  என கோரிக்கை வைத்து. அதனடிப்படையில்  சட்டப்பேரவையில் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என  அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான விலை கொடுத்தால்தான்  அவர்களிடமிருந்து பாலைகொள்முதல் செய்ய முடியும்.  அதன்பின்னர்தான் நுகர்வோர்களுக்கு தேவையான அளவு பால் விநியோகம் செய்ய முடியும். எனவே தவிர்க்க முடியாத  சூழலில் தான்பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 2005-ம் ஆண்டு  முதல் 2015-ம் ஆண்டுவரை 4 லட்சத்து 67 ஆயிரத்து 670  மனுக்கள் பெறப்பட்டு 4 லட்சத்து 52 ஆயிரத்து 347 மனுக்கள்  முடித்து வைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தால் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு  அவைகள் மீட்கப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன உற்பத்தி  நிறுவனங்கள் மூடப்பட்டு வருவது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பொருளாதார மந்தநிலை அகில  இந்திய அளவில் விவாதம்  நடத்தி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வரும். தமிழ்நாட்டை பொறுத்தவரை எந்தவித பொருளாதாரப் பின்னடைவும்   இல்லை.

ஜெ. தீபா அதி.மு.கவில் இணைவது குறித்து கட்சி  தான் முடிவு செய்யும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சசிகலா,  தினகரன் ஆகியோர் குடும்பத்தைத் தவிர யார் வந்தாலும்  கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஏற்கனவே கட்சி  முடிவு செய்யப்பட்ட நிலையில் உறுதியாக உள்ளோம்.  தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் வெறும் அனுமானம் மட்டுமே என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து