நெல்லை மாவட்ட அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 11

நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மற்றும் பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று 21.8.2019 முதல் 9.9.2019 முடிய 1000 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.     மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் மற்றும், 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து