வேகமுடன் வீசியது காற்று: அமெரிக்காவில் திறந்தவெளி பூங்காவில் இருந்த மெத்தைகள் பறந்த வீடியோ வைரல்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      உலகம்
USA force wind 2019 08 21

வாஷிங்டன் : அமெரிக்காவில் வேகமுடன் வீசிய காற்றில் மெத்தைகள் பறந்து சென்றது அங்கிருப்போருக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு தி பெட் சினிமா என்ற பெயரில் திறந்த வெளியில் திரையரங்கு அமைத்து படம் திரையிட வசதி செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திறந்தவெளி பூங்காவில் மெத்தைகள் அமைத்து இருந்தனர். படத்திற்கு செல்ல விரும்புபவர்கள், காற்று நிரப்பிய மெத்தை ஒன்றை முன்பதிவு செய்து கொண்டு வசதியுடன் அமர்ந்து படம் பார்க்கலாம்.

இந்நிலையில், திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் திறந்த வெளி திரையரங்கில் போடப்பட்டிருந்த மெத்தைகள் புல்வெளி மீது பறந்து சென்றன. அங்கிருந்த பொதுமக்கள் அவற்றை தடுப்பதற்காக ஓடினர். மெத்தைகள் பறக்கும் காட்சிகளை ராப் மனேஸ் என்பவர் அருகிலுள்ள நீச்சல் குளம் ஒன்றில் இருந்தபடி படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். காற்று வேகமுடன் வீசியதில் மெத்தைகள் பறந்து சென்றது பூங்காவில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து