முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் என்கவுண்ட்டர் பயங்கரவாதி சுட்டு கொலை

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரவலை தடுக்க தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நேற்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். சிறப்பு காவல் அதிகாரி ஒருவரும் இதில் உயிரிழந்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து