முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அபாய அளவை மீறி அதிகரிக்கும் வெள்ள நீர்: ரயில்போக்குவரத்து நிறுத்தம்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் அபாய நிலையை எட்டியிருந்த யமுனா நதியின் வெள்ளம் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் பழைய யமுனா பாலம் எனப்படும் டெல்லியின் ரயில் போக்குவரத்துப் பாலம் மூடப்பட்டது.

அரியானாவில் கடும் மழை காரணமாக அங்குள்ள தடுப்பணைகள் திறந்து விடப்படும் நிலை ஏற்பட்டடது. இதனால் யமுனையில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யமுனா நதியின் நீர்மட்டம் திங்களன்று 205.33 மீட்டர் அபாய அடையாளத்தை மீறியது. இதைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சமவெளிகளில் வசிக்கும் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு அரசு நிறுவனங்களால் அமைக்கப்பட்ட 2,300 கூடாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு ரெயில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளநீரின் அளவு உயர்ந்து கொண்டிருந்ததை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் இரவு பழைய யமுனா பாலம் (லோஹெவாலா புல்) மீதான ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படடது. ரயில் பாலம் மூடப்பட்ட நிலையில் பாலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த பல ரயில்கள் தங்கள் இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து