தரமான கல்வியை வழங்குவதால், தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து தேசிய அளவில் தமிழகம் முதலிடம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      தமிழகம்
CM Edapadi speech 2019 08 21

ஈரோடு : தரமான கல்வியை வழங்குவதால், தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை, வேளாளர் மகளிர் கல்லூரி பொன் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலர் சந்திரசேகர் வரவேற்றார். கலெக்டர் கதிரவன், அறக்கட்டளை தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பொன்விழாவை முன்னிட்டு வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தும், பொன்விழா மலரை வெளியிட்டும் பேசியதாவது,

இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்கினால்தான் மனித வளம் மேம்பட்டு, தொழில் திறன் உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் உயரும், சமூகம் மேம்படும் என அம்மா வலியுறுத்துவார். அதன்படி தமிழகத்தில் 13 மாநில பல்கலைக் கழகங்கள், 829 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 718 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், 585 இன்ஜினியரிங் கல்லூரிகள், 520 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

தமிழகத்தில் மாணவர்களுக்கு உயர்தர கல்வியுடன் அடிப்படை வசதி, சலுகை, உதவித் தொகை, ஆராய்ச்சிக்கான வாய்ப்பு, இலவச விடுதி என தேவையான வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் பயனாக கடந்த 2011-ல் அம்மாவின் ஆட்சியின் போது 32 சதவீதமாக இருந்த உயர்கல்வி தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் உயர் கல்வி பயில்வோர் சதவீதம் 25.8 சதவீதம் ஆகும். இதனால் தேசிய அளவில் உயர் கல்வி படிப்போரில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நடப்பாண்டில், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் திருப்பி வழங்கும் திட்டத்திற்கு ரூ. 460.25 கோடி, 10 பல்கலைக் கழகங்கள் மற்றும் 65 அரசுக் கலைக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.382 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலை கல்வி முதல் தரமான கல்வி கிடைக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் தேசிய அளவில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து வருகிறது. பெண்களுக்கு அதிக சமுதாய பொறுப்புள்ளது. படிக்கும் பெண்கள், கல்வியுடன், சமூக அக்கறையுடன் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், சமூக நலன் காத்தல் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போது, சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும். பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கை வேண்டும். ஆண்களைவிட பெண்கள், கல்வியில் அதிக அக்கரையுடன் விளங்குகின்றனர். எனவே நல்ல சிந்தனையை ஏற்படுத்தினால் சாதிக்க முடியும்.

ஈரோட்டில் 5.5 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம்

ஈரோடு மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை இணைத்து கடந்த மூன்றாண்டுகளில் பல திட்டப் பணிகள் முடிக்கப்பட்டும், திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு விரைவில் பணி துவங்கும் நிலையிலும் உள்ளது. அதில் ஈரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதியில் ரூ. 58.54 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் காளிங்கராயன் விடுதி முதல் திண்டல் மேடு வரை மேம்பாலம் தேவை என கேட்டிருந்தனர். இப்பணிக்காக ரூ. 300 கோடி அனுமதிக்கப்பட்டு, ஆய்வுப்பணிகள் முடிந்து 5.5 கி.மீ தூரத்துக்கு பாலம் அமைக்க திட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம்- ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் ரூ. 29.90 கோடி செலவில் பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

ரிங் ரோடு

ஈரோடு - தொட்டிபாளையம் இடையே சாஸ்திரி நகர் பகுதியில் ரயில்வே பாதையை கடக்கும் வகையில் ரூ.10.10 கோடி செலவில் உயர் மட்ட பாலம் அமைத்து திறக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ரூ.76.25 கோடியில் ரிங் ரோடு அமைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. நிலம் எடுப்பு தொடர்பாக 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 10 சதவீத பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டில் விரைவில் தீர்வு காணப்பட்டு பணிகள் முடிக்கப்படும். பவானியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, புறவழிச் சாலை பணி துவங்கும். மேட்டுப்பாளையம், சத்தி, கோபி, சித்தோடு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ. 270 கோடி அளவு திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி துவங்க உள்ளது. கோபியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வு நடக்கிறது. ஈரோடு, பவானி, மேட்டூர், தொப்பூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும். பொதுப்பணித்துறை மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ. 67.76 கோடி மதிப்பில் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படவுள்ளது. ஜம்பை அருகில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்காக, ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. 3 அல்லது 4 மாதத்தில் மீதமுள்ள பணி முடியும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சக்தி மசாலாவின் சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் விருட்சம் திட்டம் மூலம் 75 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 17 லட்சத்து 9ஆயிரத்தை முதல்வர் வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், சிவசுப்பிரமணியம், ராஜாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாளர் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அருண் நன்றி கூறினார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து