முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை எதிர்த்து துருக்கி போன்ற நாடுகள் போராட வேண்டும் - அதிபர் டிரம்ப் சொல்கிறார்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியா, ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பயங்கரவாதம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான மற்ற நாடுகளின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா மட்டுமே பயங்கரவாதிகளுக்கு எதிராக முழு உத்வேகத்துடன் போராடி வருகிறது. 7000 மைல்கள் அப்பால் இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கு நடக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வரும் காலங்களில் பயங்கரவாதிகளை ஒடுக்க ரஷ்யா, துருக்கி, இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் போராட வேண்டும். மேலும் ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அமெரிக்க சிறையில் உள்ளனர். அவர்களை ஐரோப்பிய நாடுகளிடம் ஒப்படைக்க விரும்புகிறோம். அவர்கள் ஏற்க மறுத்தால் அவர்களை விடுதலை செய்யவும் தயங்க மாட்டோம். ஏனெனில் இன்னும் 50 ஆண்டுகள் அவர்களை சிறையில் வைத்து செலவு செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து