முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே மாதம் 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் மாதம்  4-ம் தேதி  வெளியிடப்படும்.

2019 - 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. மேலும் வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவி்க்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியல், ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்களும் நீட் தேர்வெழுத தகுதியுடையவர்கள் ஆவர்.

தனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த தேர்வில் நாடு முழுவதும் 14.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,23,078 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 59,785 பேர், அதாவது 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து