5 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ், அரபு நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் - பாரீசில் நடக்கும் ஜி - 7 மாநாட்டில் பங்கேற்கிறார்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      இந்தியா
pm modi 2019 06 30

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக நேற்று புறப்பட்டு சென்றார். இந்த பயணம் இந்தியாவுக்கும், இந்த 3 நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும், கூட்டுறவையும் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்லும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து நேற்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி, வரும் 26-ம் தேதி வரை பயணத்தில் இருந்து அதன் பின் நாடு திரும்புகிறார். முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி இன்று அங்கு தங்குகிறார். இன்று அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு நாடு, பக்ரைன் நாட்டிற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, பின்னர் பாரிஸ் நகரில் நடக்கும் ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார். அங்கு அந்நாட்டின் பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுகின்றனர்.

பிரான்ஸில் கடந்த 1950, 1950-களில் இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் பலியான இந்தியர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவரங்கில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் பிரதமர் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து 25 மற்றும் 26-ம் தேதிகளில் பாரீஸ் நகரில் நடக்கும் ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.

இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில்,

இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே சிறந்த நட்புறவு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை பரிமாற்றி அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும். வலிமையான ராஜாங்க உறவுகள், பொருளாதார கூட்டுறவு போன்றவை இரு தரப்பு நாடுகளின் பரிமாற்றத்தால் ஏற்படும். இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர வளர்ச்சி, அமைதி, மேம்பாடு ஆகியவற்றை கொண்டு வரும் நீண்டகால நட்பை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின் இடையே 23 மற்றும் 24-ம் தேதிகளில் பிரான்ஸில் இருந்தவாறு ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை சந்தித்து பிரதமர் மோடி, சர்வதேச விவகாரங்கள், பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ஒத்துழைப்பு குறித்து பேச உள்ளார். அபுதாபி இளவரசுருடன் இணைந்து, பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவுக்கான தபால் தலையையும் வெளியிடுகிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு 24 மற்றும் 25-ம் தேதியில் பக்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். முதல்முறையாக பக்ரைன் நாட்டுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பயணத்தின் போது பக்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் இஷா அல் கலிபா உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து