முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப்பரிமாற்ற மோசடி: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராஜ்தாக்கரே நேரில் ஆஜர்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : ஐ.எல். - எப்.எஸ். நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் மராட்டிய நவநிர்மான் சேனை தலைவர் ராஜ் தாக்கரே விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் உறவினரும், மராட்டிய நவநிர்மான் சேனை கட்சியின் தலைவருமான, ராஜ் தாக்கரே மீது, ஐ.எல். - எப்.எஸ். தனியார் நிறுவன முதலீடு தொடர்பாக, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ரூ. 450 கோடி மதிப்பிலான தொகை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று நேரில் ஆஜராகுமாறு ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. ராஜ் தாக்கரே மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போட்டுள்ளதாக மராட்டிய நவநிர்மான் சேனை கட்சியினர் குற்றம் சாட்டியதுடன் ஒருநாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். கட்சியினர் உடனான ஆலோசனைக்குப் பிறகு போராட்டத்தை வாபஸ் பெற்ற ராஜ் தாக்கரே நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு நேரில் ஆஜரானார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கப்பிரிவு அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சந்தீப் தேஷ்பாண்டே உள்பட மராட்டிய நவநிர்மான் சேனை கட்சியின் முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

ராஜ் தாக்கரேவின் வீடு, அலுவலகம் உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து