முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெஸ்சி என்னை சிறந்த வீரராக உருவாக்கினார்: ரொனால்டோ

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

இத்தாலி : பரம எதிரியான மெஸ்சிதான் என்னை சிறந்த வீரராக உருவாக்கினார் என போர்ச்சுக்கல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணியின் நெய்மர் ஆகியோர் இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார்கள்.இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும், மெஸ்சிக்கும் இடையில்தான் கடும்போட்டி நிலவி வருகிறது. இருவரில் யார் சிறந்தவர்கள் என்பதை விவாதிக்காத கால்பந்து ரசிகர்களே இருக்க முடியாது.

மெஸ்சி ஆரம்ப காலத்தில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய பிறகு இருவருக்கும் இடையில் கடும் போட்டி மனப்பாங்கு ஏற்பட்டது.கால்பந்து போட்டியின் சிறந்த விருதான பலோன் டி’ஆர்-ஐ இருவரும் தலா ஐந்து முறை வென்றுள்ளனர். கால்பந்து போட்டியில் பரம எதிராக மோதும் இவர்கள், பொது இடங்களில் மிகப்பெரிய அளவில் சந்தித்ததோ, பேசி உரையாடியதோ கிடையாது.

இந்நிலையில் மெஸ்சிதான் என்னை சிறந்த வீரராக உருவாக்கினார் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில், நான் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்குச் செல்லும்போது மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக மெஸ்சி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். ஏனென்றால் எங்களுக்கு எதிராக கடும் போட்டி நிலவியது. அவரது பக்கத்தில் இருந்து வந்த இந்த கருத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். மெஸ்சி என்னை சிறந்த வீரராக உருவாக்கினார். அதேபோல் நானும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் விருதுகளையும், கோப்பைகளையும் வெல்லும்போது அவருக்கு தேள் கொட்டியது போன்று இருக்கும். அவர் வெற்றி பெறும்போது எனக்கும் அதேபோல் இருக்கும்.எங்களுக்கு இடையில் தொழில்முறையிலான தொடர்பு சிறப்பாக உள்ளது. ஏனென்றால் 15 வருடமாக கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டது கிடையாது. ஆனால், வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து