மிகப்பெரிய மேட்ச் வின்னர் ரோகித் சர்மா: சோயிப் அக்தர்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Rohit Sharma-Shoaib Akhtar 2019 08 22

இஸ்லாமாபாத்  : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் அது இந்தியாவுக்கு தவறாக முடியும். ரோகித் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தியா இரண்டு தொடக்க வீரர்கள், புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாடும். விக்கெட் கீப்பருடன் நான்கு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால், கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவர் சேர்க்கப்படலாம்.அந்த இடத்தில் ஹனுமா விஹாரி களம் இறங்குவாரா, ரோகித் சர்மா களம் இறங்குவாரா என்பதே கேள்வி. இந்நிலையில் ஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில்,ரோகித் சர்மாவுக்கு ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அவர் அணியில் இல்லை என்றால் இந்தியாவுக்கு தவறாக முடியும். தற்போது சூப்பர் பார்மில் உள்ளதால் அவருக்கு இப்போதே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து